தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்

Updated: 17 July 2018 16:00 IST

ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வண்ணம் அவர்கள் உலக சாம்பியன்ஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த திறந்த வெளி பேருந்தில் கோப்பையை ஏந்தி குதூகலமாக வளம் வந்தனர்

FIFA World Cup 2018: France Gives World Cup Winners A Heroes
© AFP

2018 கால்பந்து உலககோப்பையை வென்ற ஃபிரான்ஸ் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாம்ப்ஸ் எலிசீஸில் நடைபெற்ற அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேசத்தின் புதிய நாயகர்களுக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். ரஷ்யாவில் ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4 - 2 என்கிற கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினரைக் காண உற்சாகமான கூட்டம் பாரீஸ் நகரம் எங்கும் குழுமியிருந்தது. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வண்ணம் அவர்கள் உலக சாம்பியன்ஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த திறந்த வெளி பேருந்தில் கோப்பையை ஏந்தி குதூகலமாக வளம் வந்தனர்.

ஃபிரான்ஸின் அனைத்து தேசிய கொண்டாட்டங்களுக்கும், மக்கள் ஒன்றிணையும் இடமான சாம்ப்ஸ்-எலிசீஸில் கூடியிருந்த 28 வயதான ஜூலியா கோஹென், “ அது காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. ஃபிரான்ஸே அழகாக இருக்கிறது” என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த பேரணிக்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, கூடியிருந்த 300,000 மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,000க்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்த பேரணி கூட்டத்திற்கு மேலே விமானப்படையின் அக்ரோபேடிக் பிரிவைச் சேர்ந்த ஒன்பது ஜெட் விமானங்கள் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு புகைகளை தூவியவாறு பறந்து சென்றன.

சாம்ப்ஸ் எலிசீஸில் இருந்து கிளம்பிய பிறகு, வீரர்கள் எலிஸீ அரண்மனையில் அதிபரின் வரவேற்பிற்கு முன்பாக பாரம்பரிய நீல சூட்கள் அணிந்து கொண்டனர். அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி ப்ரிகிட்டீ நீல நிற உடையில் காட்சியளித்தனர்.

மேக்ரோன் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான ’லீகியன் ஆஃப் ஹானர்’ வழங்கப்படும் என உறுதியளித்தனர். இந்த விருது 1998ம் ஆண்டு முதல் முறையாக உலககோப்பை வென்ற ஃபிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு முதல் தம்பதியினர் தேசிய கீதம் பாடுகையில் அணியினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் வீரர்களுடன் தனிப்பட்ட சந்திப்பிற்கு உள்ளே சென்றனர்.

”உங்கள் அனைவருக்கும் நன்றி” என மேக்ரோன் பின்னர் மறுபடியும் வெளியே கூடிய போது அணியினரிடம் தெரிவித்தார். மேலும் “இந்த அணி ஒற்றுமையாக இருப்பதனால் தான் அழகாக இருக்கிறது!” என்றார்

மிட்பீல்டர் பால் போக்பா, களத்திற்கு வெளியுமே, வெற்றி களிப்பில் ராப் பாடல்களைப் பாடி விருந்தினர்களை உற்சாகப்படுத்தினார்.
”களத்திற்கு செல்லும் முன்பே நாங்கள் அவர்களை துவம்சம் செய்யப்போகிறோம் என்று கூறிக்கொண்டு தான் சென்றோம்” என்று போக்பா கூறினார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

எலிஸீ தோட்டத்தில் நடைபெற்ற விருந்தில் கிட்டதட்ட 1,000 உள்ளூர் கால்பந்து கிளப் விளையாட்டு வீரர்கள் உள்பட 3,000 பேர் கலந்து கொண்டனர். இதில் ஃபிரான்ஸ் அணியின் கைலன் பாப்பேவின் போண்டி கிளப்பும் கலந்து கொண்டது.

சில சிறுவர்கள் கேப்டன் ஹூகோ லோரிஸ் கையில் இருந்த கோப்பையை தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் லேடி காகா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பணியாற்றிய டிஜே ஸ்னேக் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடித்து 19 வயதில் புதிய உலக நட்சத்திரமாக உருவாகியுள்ள 19 வயதான பாப்பே தான் செய்ய வேண்டும் என நினைத்தை அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

”ஃபிரான்ஸ் நாட்டை சந்தோஷம் அடையச் செய்ததில் பெருமைப்படுகிறோம்” என டிஎஃ1 ஃபிரெஞ்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரைகர் அண்டோய்ன் க்ரெய்ஸ்மென் கூறுகையில்: ” என்னால் இதை இன்னும் நம்பமுடியவில்லை. இந்த கோப்பை மிகவும் கனமுள்ளதாக இருக்கிறது.” என்றார். மேலும், ”நாங்கள் ஃபிரான்ஸுக்கும், அதன் வீரர்களுக்கும் ஒரு நல்ல மதிப்பை தர முயற்சித்தோம். பல இளைஞர்கள் இந்த போட்டியைக் கண்டிருப்பார்கள், அவர்களும் அதேபோல் செய்வார்கள்,” என்று நம்புதாக கூறினார்.

மேக்ரோன் ஏற்கனவே ஞாயிறு அன்றே வெற்றி பெற்ற பின் அணியினருடன் ஆட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ காட்சிகள் வைரலாகியிருந்தது.

தற்போது ஃபிரான்ஸில் நிலவும் இந்த சாதகமான சூழல், மேக்ரோனுக்கு ஒரு நல்ல உணர்வைத் தரும் என சில விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேக்ரோன் அனுகமுடியாதவராக விலகி இருப்பவர் என, எதிர்தரப்பினர் செய்து வருகின்ற விமர்சனங்களுக்கு தக்க பதிலடியாக இது இருக்கும்.

மேலும் சிலர் பல இனக்குழுக்கள் அடங்கிய ஃபிரான்ஸ் அணியால் ஏற்பட்டிருக்கும் தேச ஒற்றுமை உணர்வு, மற்றும் அதிகரித்திருக்கும் தேசப்பற்று வெளிப்பாட்டை பற்றியும் பேசி வருகின்றனர். இந்த அணியின் போக்பா, பாப்பே உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் பாரிஸின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில், மெட்ரோ நிர்வாகம் ஆறு நிறுத்தங்களின் பெயர்களை தற்காலிகமாக முக்கிய வீரர்களின் பெயர்களுக்கு மாற்றியுள்ளது. அணியின் கோல்கீப்பர் விக்டர் ஹூகோ லோரிஸின் பெயரில் ஒரு நிலையம், விக்டர் ஹூகோ நிறுத்தம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நிலையங்களுக்கு 1998 உலகக்கோப்பை வென்ற அணியின் கேப்டன் டீஷாம்ப்ஸ் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

”இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது -- ஒன்று இந்த 23 வீரர்களும் இனி வாழ்க்கை முழுவதும் என்ன நடந்தாலும் ஒன்றாக இருப்பார்கள், மேலும் இனி அவர்கள் மீண்டும் முன்பு போல இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தற்போது உலக சாம்பியன்கள்” என டீஷாம்ப்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார்.

ஃபிரான்ஸில் 2015ல் இருந்து நடைபெற்ற தொடர் தீவிரவாத தாக்குதலில் 250 உயிர்களுக்கு மேல் பலியாகி இருக்கிற சூழலில், ஞாயிறு இரவு நடைபெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி நடந்து முடிந்திருப்பதை நினைத்து மேக்ரோன் நிம்மதியாக இருப்பார்.

நாடு முழுவதும் 292 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், போலிஸுக்கும் சில கும்பல்களுக்கும் சில தனிப்பட்ட மோதல்களும் பாரீஸ், லையன் மற்றும் மார்ஸைல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.

எட்டு சிறார்கள் உட்பட 31 பேர் பாரீஸ் வெற்றி கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்களுடைய காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒரு பாரீஸ் வழக்கறிஞர் திங்களன்று தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பையை வென்ற ஃபிரான்ஸ் அணிக்கு உற்சாக வரவேற்பு
  • ஃபிரான்ஸின் புதிய ஹீரோக்களாக பார்க்கபப்ட்டனர்
  • இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4-2 என வீழ்த்தியது ஃபிரான்ஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
Advertisement