#Neymarchallenge: ட்ரெண்ட் ஆகி வரும் நெய்மரின் 'காபி கேட்'

Updated: 09 July 2018 17:27 IST

நெய்மர், 2022-ல் நடக்க இருக்கும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடும் போது அவருக்கு வயது 30 ஆக இருக்கும்

FIFA World Cup 2018: Fans Diving During The Neymar Challenge Is Breaking The Internet

நெய்மர் உலக கால் பந்து வீரர்களிலே மிகவும் திறமைவாய்ந்த வீரராக அறியப்படுகிறார். ஆனால் அவரின் இந்த பெயரையும், புகழையும், மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில், போலியாக நடித்த அவரது செயல் மறக்கடித்துவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோவுக்கு எதிரான போட்டியில் நெய்மர் செய்த ‘காப்பி கேட்’ உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கலாய்த்து ட்ரெண்டாக்கப்பட்டுள்ளது. #Neymarchallenge என்ற ஹாஷ்டாக்குடன் ரசிகர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் வைரலாக பரவுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று நடந்த காலிறுதியில் பெல்ஜியமிடம் 2-1 தோற்று பிரேசில் வெளியேறியது.
 

 

உலகிலேயே விலை உயர்ந்த வீரர்களில் ஒருவரான நெய்மர், 2022-ல் நடக்க இருக்கும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடும் போது அவருக்கு வயது 30 ஆக இருக்கும்.

தோல்வியினால் பிரேசில் அணி அதிர்ந்து போய் இருக்கிறது. பெல்ஜியம் உடனான ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்தில் 2-0 என்று இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அந்த அணியால் தோல்வியை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. போட்டியில் மாற்றாக வந்த பிரேசில் வீரர் ரீனாடோ அகஸ்டோ போட்டியின் இறுதியில் ஒரு கோல் அடித்தார். இதை போலவே கடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணி ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோற்று வெளி ஏறியது குறிப்பிடத்தக்கது.

 

Comments
ஹைலைட்ஸ்
  • நெய்மர் சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது
  • ரசிகர்கள் நெய்மர் போலவே காப்பி கேட் செய்து வீடியோவை பதிவிடுகின்றனர்
  • பிரேசில் பெல்ஜியமிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தொற்று வெளி ஏறியது
தொடர்புடைய கட்டுரைகள்
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பார்சிலோனாவிற்கு
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
Advertisement