உலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து

Updated: 13 July 2018 20:17 IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நாளை பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன

FIFA World Cup 2018, Belgium vs England, Third Place Play-Off: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நாளை பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் பெல்ஜியம் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பிரான்ஸ் அணி 1-0 என்கிற கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது.

அதுபோல, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து குரோஷியா ஆகிய நாடுகள் மோதிக்கொண்டன. இதில் 2-1 என்கிற கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை தோற்கடித்தது.

இந்நிலையில், வருகிற சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.

இந்த போட்டியை சோனி டென் 2, சோனி டென் 3, சோனி இஎஸ்பிஎன் ஆகிய சேனல்களில் நேரலையில் காணலாம் . அதேபோல சோனி லைவ் என்கிற இணையதளத்தில் இந்த ஆட்டத்தை நேரடியாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிஃபா 2018: மூன்றாம் இடத்தை பிடித்தது பெல்ஜியம் அணி

Advertisement