ஃபிஃபா 2018: மூன்றாம் இடத்தை பிடித்தது பெல்ஜியம் அணி

Updated: 15 July 2018 15:54 IST

போட்டியின் இறுதி வரை, இங்கிலாந்து அணி கோல் அடிக்காததால், 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.

Belgium vs England, FIFA World Cup Highlights, Third Place Play-Off: Thomas Meunier, Eden Hazard Score As Belgium Beat England To Finish 3rd
© AFP

கால்பந்து உலககோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை நடைப்பெற உள்ள நிலையில், 3வது இடத்திற்கான போட்டியில் இன்று பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் மோதின.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் பெல்ஜியம் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பிரான்ஸ் அணி 1-0 என்கிற கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது.

அதுபோல, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து குரோஷியா ஆகிய நாடுகள் மோதிக்கொண்டன. இதில் 2-1 என்கிற கணக்கில் குரோஷியா அணி இங்கிலாந்தை தோற்கடித்தது.

இன்று நடைப்பெற்ற போட்டியில், ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்தில் முயினியர் முதல் கோல் அடிக்க, பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது. முதல் பாதியில் கிடைத்த வாய்ப்புகளை இங்கிலாந்து அணி நழுவவிட, 45வது நிமிட இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.

2018 உலககோப்பை தொடரின் ‘கோல்டன் பூட்’ விருதுக்கு, 4 கோல்களுடன் பெல்ஜியத்தின் லுகாக்கு, 6 கோல்களுடன் இங்கிலாந்தின் ஹாரி கேனிற்கும் போட்டி நிலவியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில், போட்டியின் 61வது நிமிடத்தில், லுகாக்கு சப்ஸ்ட்யூட்டாக போட்டிக்குள் வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெல்ஜியம் அணி வீரர் இடென் ஹசார்டு, போட்டியின் 82வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.

போட்டியின் இறுதி வரை, இங்கிலாந்து அணி கோல் அடிக்காததால், 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.

இன்று நடைப்பெற்ற போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து, 6 வெற்றிகளுடன் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில், மூன்றாவது இடத்தை பெல்ஜியம் அணி பெற்றது. கடந்த 9 உலக கோப்பை தொடர்களில், ஐரோப்பிய நாடுகளே மூன்றாவது இடத்தை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வி
  • ஃபிஃபா தொடரில், பெல்ஜியம் அணி ஆறு வெற்றிகள் பெற்றுள்ளது
  • இங்கிலாந்தின் ஹாரி கேன், 6 கோல்களுடன் ‘கோல்டன் பூட் பட்டியலில் முதல் இடம்
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிஃபா 2018: மூன்றாம் இடத்தை பிடித்தது பெல்ஜியம் அணி
ஃபிஃபா 2018: மூன்றாம் இடத்தை பிடித்தது பெல்ஜியம் அணி
உலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து
உலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து
Advertisement